நாமக்கல் அருகே பிளஸ் டூ மாணவர்கள், காப்பி அடிப்பதற்கு உதவியது தொடர்பாக, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம், கல்வித்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பிற்பகல் தொடங்கிய விசாரணை, இரவு வரை நீடித்தது. எனினும் விசாரணை விவரங்கள் குறித்து தகவல் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். தமிழகம் முழுவதும் பிளஸ் டூ தேர்வுகள் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது.
நாமக்கல்லை அடுத்த பொம்மைகும்டை மேட்டில் உள்ள காமராஜர் மேல்நிலைப்பள்ளியில், நேற்றைய இயற்பியல் பாடத் தேர்வின் போது, மாணவர்கள் காப்பி அடிப்பதற்கு, தேர்வு கண்காணிப்பாளர்கள் உதவியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு, கல்வித்துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர்.