வறுமையிலும் மாநிலத்தில் முதலிடம் பிடித்த ஜெயசூர்யா




       பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த திருச்செங்கொடு மாணவர் ஜெயசூர்யா மருத்துவம் பயில விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் குடும்ப வறுமை அவரது லட்சியத்திற்கு இடையூறாக உள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஜெயசூர்யா,12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,189 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இவர் 3-ஆம் வகுப்பு பயிலும் போது, மில் தொழிலாளியான அவரது தந்தை செந்தில் குமார் விபத்தில் சிக்கி பல ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்தார்.
இதையடுத்து படிப்பில் ஆர்வம் கொண்ட மகனை, தாய் ஆனந்தி , கூலி வேலை செய்து 8 ம் வகுப்பு வரை படிக்க வைத்தார். அதன்பின்னர் உறவினர் ஒருவரின் உதவியுடன், பயின்ற ஜெயசூர்யா, +2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். தற்போது. மருத்துவம் பயின்று, ஏழைகளுக்கு சேவை செய்ய விரும்புவதாக கூறுகிறார் ஜெயசூர்யா.
ஆனால் கூலி வேலையில் கிடைக்கும் ஆனந்தியின் ஊதியம், அவரது கணவரின் மருத்துவச் செலவுக்கே பற்றாக்குறையாக இருக்கிறது. இந்த சூழலில் , முதலிடம் பிடித்த தனது மகனை, மருத்துவராக்க முடியுமா என கவலைப்படுகிறார் ஜெயசூர்யாவின் தாய் ஆனந்தி.
ஆழ்ந்த கோமாவில் இருந்த ஜெயசூர்யாவின் தந்தை, அண்மையில் தான் சுயநினைவுக்குத் திரும்பினார். தனது மகன், சாதனை படைத்த போதிலும், அவரின் மருத்துவக் கல்வி கனவை தன்னால் நனவாக்க முடியாத நிலையில் இருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.
ஜெயசூர்யாவின் மருத்துவக் கல்வி செலவுக்கு அரசு உதவ முன்வர வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

நாமக்கல் அருகே பிளஸ் டூ மாணவர்கள், காப்பி அடிப்பதற்கு உதவி



   நாமக்கல் அருகே பிளஸ் டூ மாணவர்கள், காப்பி அடிப்பதற்கு உதவியது தொடர்பாக, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம், கல்வித்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
   பிற்பகல் தொடங்கிய விசாரணை, இரவு வரை நீடித்தது. எனினும் விசாரணை விவரங்கள் குறித்து தகவல் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். தமிழகம் முழுவதும் பிளஸ் டூ தேர்வுகள் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது.
   நாமக்கல்லை அடுத்த பொம்மைகும்டை மேட்டில் உள்ள காமராஜர் மேல்நிலைப்பள்ளியில், நேற்றைய இயற்பியல் பாடத் தேர்வின் போது, மாணவர்கள் காப்பி அடிப்பதற்கு, தேர்வு கண்காணிப்பாளர்கள் உதவியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு, கல்வித்துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர்.

தூதுவளை (Solanum trilobatum)






தூதுவளை 
 
பிணிபல நீக்கும் கற்பக மூலிகை தூதுவளை.
சித்தர்கள் உடலை கற்பமாக்க கற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர். மூலிகையில் உள்ள தாதுப் பொருட்களை தனியாகவோ அல்லது பல மூலிகைகள் கலந்தோ அல்லது உலோக உபரச உப்பு பொருட்களை சேர்த்தோ நன்கு பக்குவப்படுத்திபத்தியம் மேற்கொண்டு ஒரு மண்டலம்(நாட்கள்) சாப்பிட்டு வந்தால் பிணியில்லாப் பெருவாழ்வு வாழலாம் உடலை கற்பமாக்கும் இம் மூலிகைகள்தான் கற்ப மூலிகைகள்.

தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் காயகற்ப மருந்துகள் சிறப்பானதாகும்.

காயகற்பம் = காயம்+கற்பம். காயம் என்றால் உடல். கற்பம் என்றால் உடலை நோயணுகாதபடி வலுவடையச் செய்யும் மருந்து.

நரை, திரை, மூப்பு, பிணிநீக்கி, வயதுக்கு தகுந்தவாறு ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவைத்து நீண்டநாள் வாழச் செய்வது கற்பமாகும்

தூதுவளை ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும். இதன் இலை கரும்பச்சை நிறமானது. பூ ஊதா நிறமானது. சிறிய காய்கள் தோன்றிப் பழுக்கும். இதன் கொடியிலும் இலையிலும் கூரிய முட்கள் காணப்படும்.
தூதுவளை இலை மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது.

ச‌ளி ‌பிடி‌ப்பதா‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு உட‌ல் உபாதைக‌ளி‌ல் இருமலு‌ம் ஒ‌ன்று. ச‌ளி போனாலு‌ம் இரும‌ல் போகாம‌ல் பாடு படு‌த்து‌ம். இருமலை‌ப் போ‌க்க எ‌ளிதான வ‌ழி உ‌ள்ளது. தூதுவளை‌‌ இலையை 4 அ‌ல்லது 5 எடு‌த்து அத‌ன் மு‌ட்களை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு கழு‌வி‌க் கொ‌ள்ளவு‌ம். இலை‌க்கு‌ள் 4 அ‌ல்லது 5 ‌மிளகு வை‌த்து வெ‌ற்‌றிலை‌ப் போ‌ல் மடி‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிட இர‌ண்டே நா‌ளி‌ல் மா‌ர்‌பு‌ச் ச‌ளி போ‌ய், தொட‌ர்‌ந்து வ‌ந்த கு‌‌த்த‌ல் இருமலு‌ம் காணாம‌ல் போகு‌ம்.

தூதுவளையை உளு‌த்த‌ம் பரு‌ப்பு, பு‌ளி வை‌த்து துவைய‌ல் செ‌ய்து‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். ச‌ளி ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு இ‌ந்த துவையலை‌ செ‌ய்து கொடு‌த்தா‌ல் எ‌ந்த மரு‌ந்து‌க்கு‌ம் அசராத ச‌ளியு‌ம் கரை‌ந்து காணாம‌ல் போ‌ய் ‌விடு‌ம். தூதுவளை இலை உடலு‌க்கு உஷ‌்ண‌த்தை‌க் கொடு‌க்கு‌ம் எ‌ன்பதா‌ல், சூ‌ட்டு உட‌ம்பு‌க் கார‌ர்க‌ள் அ‌திகமாக சா‌ப்‌பிட‌க் கூடாது.

நன்றி: சித்தர் மூலிகைகள்

நாமக்கல்:

 நாமக்கல் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இது ஒரு நகராட்சியாகும். நாமக்கல் நகராட்சி ஆசியாவின்முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழ் பெற்றதாகும். இது "குப்பை இல்லா நகரம்" என்னும் சிறப்பையும் பெற்றதாகும் 2011ல் நகராட்சியானது கொண்டிசெட்டிபட்டி, கொசவம்பட்டி, பெரியப்பட்டி, காவேட்டிப்பட்டி, நல்லிபாளையம், அய்யம்பாளையம், தும்மங்குறிச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதலைப்பட்டி, சின்ன முதலைப்பட்டி ஊர்களை இணைத்து விரிவுபடுத்தப்பட்டுள்ளது இதனால் நகர்மன்றங்களின் எண்ணிக்கை 30லிருந்து 39 ஆக உயர்ந்துவிட்டது. "நாமகிரி" என்று அழைக்கப்படும் 65 மீ உயர மிகப் பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது. நாமகிரி என்ற பெயரிலிருந்து நாமக்கல் என்ற பெயர் உருவானது. இவ்வூரின் பழைய பெயர் 'ஆரைக்கல்' என்பதாகும். இப்பெயர் பல கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாறையின் மீது கோட்டை ஒன்று உள்ளது இதை ராமச்சந்திர நாயக்கர் கட்டியது என கருதப்படுகிறது, இதை மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசய்யா அமைத்தார் என்ற கருத்தும் நிலவுகிறது பின்னாளில் திப்பு சுல்தான் இப்பாறைக் கோட்டையிலிருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டையிட்டார் என்றும் நம்பப்படுகிறது. மகாத்மா காந்தி அவர்களின் பொதுக்கூட்டம் இப்பாறை அருகே நடைபெற்றது அரிசனம் இயக்கத்திற்கு ஆதரவு வேண்டி 1934 பிப்ரவரி 14 அன்று நாமக்கலில்மகாத்மா காந்தி பேசிய கூட்டத்திற்கு 15,000 மக்கள் வந்திருந்தனர் இப்பாறையின் ஓரு புறம் அரங்கநாத பெருமாள் குகைக்கோயில் உள்ளது, மறுபுறம் நரசிம்ம பெருமாள் குகைக்கோயில் உள்ளது. இக்கோயில்கள் கிபி 784ல் அதியமான் மரபைச்சேர்ந்த குணசீலன் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அமைவிடம்: நாமக்கலின் அமைவிடம் 11.23° N 78.17° E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 218 மீட்டர் (715 அடி) உயரத்தில் இருக்கின்றது. அருகிலுள்ள ஆறு காவிரி. பொருளாதாரம்: உள்ளூர் மக்களின் சுய முயற்சியால் சரக்கு போக்குவரத்து துறையில் நாமக்கல் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. 10,000 க்கும் அதிகமான லாரி (Lorry) என்னும் சுமையுந்து வண்டிகள் இங்கு உள்ளன. சுமையுந்து வண்டிகளின் உடல் அமைப்பைக் கட்டுவதில் இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றது. சுமையுந்து தொடர்பான பட்டறை என்னும் தொழில் கூடங்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் இங்கு உள்ளது. நகர்ப்புறத்தில் சுமையுந்து தொழில் சிறப்படைந்ததை போல கிராமப்பகுதியில் கோழி வளர்ப்பு சிறப்படைந்துள்ளது. கோழி வளர்ப்பில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது.முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது தொடர்பான கோழி & மாடு தீவன (Feeds) ஆலைகள் பத்துக்கும் மேல் இங்கு உள்ளன. தமிழகத்தின் ஒட்டு மொத்த முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 90 ‌விழு‌க்கா‌ட்டை பூ‌ர்‌த்‌தி செ‌‌‌ய்கிறது. மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் சேக்கோ (Sego) எனப்படும் சவ்வரிசி ஆலைகள் அதிக அளவில் உள்ளன, சுற்றுலா இடங்கள் நாமக்கல் ஆஞ்சநேயர்: இராமசந்திர நாயக்கரால் கட்டப்பட்ட திப்பு சுல்தான் பயன்படுத்திய நாமக்கல் மலைக்கோட்டை தற்போது தொல்பொருள் துறையின் கட்டப்பாட்டில் உள்ளது. இதன் மீது ஏறுவதற்கு மலையின் தென்மேற்கு பகுதியில் சிறிய படிகளை பாறையை (மலையை) செதுக்கி செய்துள்ளனர். இம்மலையில் இருந்து பார்த்தால் நாமக்கலின் சுற்று வட்டாரம் தெளிவாக தெரியும். இது பாறையானதால் மாலையில் ஏறினால் வெப்பம் குறைவாக இருக்கும் அல்லது காலையில் ஏறி வெப்பம் தாக்குவதற்குள் இறங்கினால் நலம். தண்ணீர் & சில திண்பண்டங்கள் எடுத்து செல்வது நல்லது. குரங்குகள்உள்ளதால் உங்கள் உடைமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். அருள்மிகு நரசிம்மர்-நாமகிரி தாயார் கோயில் நாமக்கல் மலையின் (மலைக்கோட்டை) மேற்கு புறம் உள்ளது. கணித மேதை இராமானுஜர் நாமகிரி தாயாரின் பக்தர். நரசிம்மரின் சிலை மலையை குடைந்து வடிக்கப்பட்டுள்ளது. நாமகிரித் தாயாரின் கோயில் மலையை குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது. இது ஓரு குடைவரை கோயில், இது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. புகழ்மிக்க நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் நரசிம்மர் நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இவர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்குள்ள ஆஞ்சனேயருக்கு கோபுரம் கிடையாது. உயர்ந்த ஆஞ்சநேயர் சிலைகளுள் இச்சிலையும் ஒன்று. மலையின் கிழக்கு புறம் அருள்மிகு அரங்கநாதன் கோயில் உள்ளது. இங்கு திருவரங்கன், 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடன் மீது படுத்தவாறு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இது ஒரு குடைவரை கோயில், இதுவும் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. நாமக்கலில் இருந்து துறையூர் செல்லும் வழியில் 7 கி.மீ தொலைவில் கூலிப்பட்டி என்ற இடத்தில் சிறிய குன்றில் முருகன் கோயில் உள்ளது. தெய்வத்திரு கிருபானந்த அடிகளார் இக்கோயிலுக்கு அடிக்கடி வருகை தருவார்.நாமக்கலிருந்து கரூர் செல்லும் வழியில் பரமத்தி-வேலூர் அருகேயுள்ள ஜேடரபாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள தடுப்பணை. நாமக்கலில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் 10 கி.மீ தொலைவில் தத்தகிரி முருகன் ஆலயம் உள்ளது. இங்கு தத்தாஸ்வரேயர் சன்னதியும் உள்ளது. இக்கோயில் சேந்தமங்கலத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு அம்மண சாமியார் என்பவர் சமாதி நிலையை அடைந்துள்ளார். நாமக்கலில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் முத்தக்காப்பட்டியில் பெரியசாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கட்டடம் ஏதும் இல்லை. கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள தோப்பில் இக்கோயில் அமைந்துள்ளது உள்ளது. வார இறுதி நாட்களில் ஏராளமான மக்கள் வருவர். இக்கோயிலுக்கு முத்தக்காப்பட்டியில் இருந்து சிறிது தொலைவு உள்ளே செல்ல வேண்டும். இங்கு செல்வதற்கு சிற்றுந்து (Mini Bus) வசதி உள்ளது. நைனா மலையில் அருள்மிகு வரதராச பெருமாள் கோயில் உள்ளது. மலை மீது ஏறியே இக்கோயிலுக்கு செல்ல முடியும். 2500 லிருந்து 3000 படிக்கட்டுக்கள் வரை உள்ளது. புரட்டாசி மாத சனிக்கிழமை பெருந்திரளான மக்கள் இங்கு வருவர். இக்கோயில் புதன்சந்தையிலிருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் உள்ளது. ஆகாயகங்கை அருவி நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையிலுள்ள அய்யாறு ஆற்றின் மீது அமைந்துள்ளது. கொல்லி மலையில் அமைந்துள்ள அரப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாயகங்கை அருவி உள்ளது. இங்கு செல்ல தமிழக அரசின் சுற்றுலா துறை படிக்கட்டுக்கள் அமைத்துள்ளது.அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதியை அடைகிறது. நாமக்கலிருந்து கரூர் செல்லும் வழியில் பரமத்தி-வேலூர் அருகேயுள்ள கொளக்காட்டுப்புதூரிலுள்ள தங்காயி அம்மன் கோவில் மிக பிரசித்தி பெற்றது. நாமக்கலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அணைதோட்டம் (நருவலூர் புதூர் கிராமம்) என்ற பகுதி இருக்கும் ஸ்ரீ ஏரிக்கரை முத்துசாமி / கருப்பண்ண சாமி மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு மும்பை மற்றும் டெல்லி இருந்து பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் இப்பகுதி மக்கள் ஏரிக்கரை முத்துசாமிக்கு திருவிழா நடத்துகின்றனர். விளை பொருட்கள் நாமக்கல் மழை மறை பகுதியில் அமைந்திருப்பதால் இங்கு நஞ்சை விவசாயம் அல்லாமல் புஞ்சை விவசாயமே நடைபெறுகிறது. சோளம், மரவள்ளிக்கிழங்கு,எள், கரும்பு, நெல், வெற்றிலை, பாக்கு, மக்காசோளம், துவரை, உளுந்து, ஆமணக்கு, தட்டைபயறு, பருத்தி & நிலக்கடலை பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. Thavamani Ramasamy

வெள்ளரி!!!

 வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும்.
வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால், தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின், இத்தனையு வெள்ளரியில் உண்டு.

இவற்றைவிட, நம் இத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும். செரிமானம் தீவிரமாகும். பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேஷ ஜீரண நீர் சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

மலத்தைக் கட்டுப்படுத்தும் பித்தத்தைக் குறைக்கும். உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. வெள்ளரிப் பிஞ்சை உட்கொண்டால் திரிதோஷமும் போகும் என்று பழைய வைத்திய நூல்கள்பேசுகின்றன.
புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது.

நஞ்சை நீக்கும் அற்புக ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும்.
நுரையீரல் கோளாறுகள், கபம் & இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல.
                                                               இணையதள செய்தியாளர் :
- சுனிதா ராணி
 


அன்பான உறவுகளே இன்று +2 ரிஸல்ட் வெளியாகிறது ..வெற்றி பெறும் பிள்ளைகளை மேலும் ஊக்கப்படுத்துங்கள் தோல்வி பெறும் பிள்ளைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள் காயப்படுத்திவிடாதீர்கள் இன்றைய தோல்வி நாளைய இமாலய வெற்றிக்கு அடித்தளம் என்பதை கூறி அரவணையுங்கள் குறிப்பாக பெண்பிள்ளைகள் மிகவும் சோர்ந்துவிடுவார்கள் அன்போடு அரவணைத்து அவர்களின் சோர்வான மனநிலையை மாற்றுவதே அவர்களின் எதிர்காலத்துக்கான அருமருந்து ....         
                                                                                                                    
மாணவர்களின் எதிர்காலம் அக்கரையில்   -சிபிசந்தர்